செம்மொழியான தமிழ்மொழியை உலகிற்கு உரைத்தார், அப்துல் கலாம்!
செம்மொழி மாட்டின் உச்ச நோக்கம் தவறிச் செல்கின்றது எனப் பலராலும் தெரிவிக்கப்பட்டு வரும் இன்றைய நிலையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரிகளுக்குள் பொதிந்துள்ள உண்மை விளக்கி, தமிழ் மொழி ஒரு செம்மொழிதான் என்பதை அயல் நாட்டவரிடம் உரைத்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உரை ஒன்று முக்கியத்துவம் பெறுகிறது.
செம்மொழி மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்துள்ள நிலையில், பார்க்க வேண்டிய ஒரு ஒளிப்பதிவு இது. ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத் தொடர் ஒன்றில் ஆங்கிலத்தில் அயல்நாட்டவரிடம் செம்மொழியான தமிழ்மொழியின் தாத்பரியம் குறித்து அவர் சுருக்கமாகத் தெரிவித்த விளக்ககத்தின் ஒளிப்பதிவு இது.
தமிழறிஞரும், ஆர்வலரும், தமிழருமான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் செம்மொழிமாநாட்டில் சேர்த்துக்கொள்ளப்படாது ஓரங்கட்டப்பட்டுள்ளார், எனப் பல்வேறு தரப்புக்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: சமுதாய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share your views...
1 Respones to "செம்மொழியான தமிழ்மொழியை உலகிற்கு உரைத்தார், அப்துல் கலாம்!"
நல்லோர்களை அரசியல் வாதிகள் நேசிப்பதில்லை.
கருத்துரையிடுக