ஆயங்குடி தண்ணீர் பிரச்சினை-ஊராட்சி மன்றம் விழித்துக்கொள்ளுமா?



  ஆயங்குடியில் சுண்ணாம்பு நீர் பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் பெரிய பள்ளிவாசல் டேங்கிற்கு அருகில் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களைத் தவிர மற்ற தெருக்களுக்கு குறிப்பாக தோப்புத்தெரு பகுதியில் சுத்தமாக தண்ணீரே வருவதில்லை. சில நேரங்களில் சொட்டு சொட்டாக வரும். பல நேரங்களில் காற்றுதான் வரும். தோப்புத்தெரு பள்ளிவாசலில் பள்ளிவாசல் உபயோகத்திற்காக சிறிய போர் உள்ளது. பள்ளிவாசலில் இருந்து தண்ணீரை குடத்திலும்,வாலியிலும் பிடித்துச் சென்றுதான் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வருத்ததுடன் தெரிவிக்கின்றனர். குளிப்பு கடமையானவர்கள் பஜ்ர் நேரத் தொழுகைக்கு குளிப்பதற்காக மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். ஊராட்சி மன்ற நிர்வாகிகள் இதற்காக விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா? மேலும் ஊர் பெரிதாகிவிட்டதால் இரண்டு அல்லது மூன்று இடங்களில் டேங்க் அமைத்தால்தான் இப்பிரச்சினை தீரும்.

  இச்செய்தியை படிப்பவர்கள் கண்டிப்பாக தங்கள் கருத்துகளையும், கண்டனங்களையும் பெயர் மற்றும் இமெயில் முகவரியுடன் பதிவு செய்யவும்.  


கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |




Share your views...

1 Respones to "ஆயங்குடி தண்ணீர் பிரச்சினை-ஊராட்சி மன்றம் விழித்துக்கொள்ளுமா?"

T.Safiullah சொன்னது…

Why dont demand the water suply from the Govt.
Gather the thousands of people and take every a pot and walk to KM Koil to Taluk office to RDO and rise your voice there . We have right to demand the water suply from the GOVT.
Thanks & Regard


24 ஜூலை, 2010 அன்று 8:27 PM
 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info