வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியலாம்
சென்னை:வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் முறையை, தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் முதல் முறையாக வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் முறையை, சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வசதியை சென்னையில் நேற்று நடந்த தேர்தல் கமிஷன் வைர விழாவின்போது,தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா துவக்கி வைத்தார்.
சென்னை மாவட்டத்தில், தற்போது, 27 லட்சத்து 20 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 97.83 சதவீத வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சென்னை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், எஸ்.எம்.எஸ்., வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, சென்னை மாவட்ட வாக்காளர்கள் மட்டுமே இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
வாக்காளர்கள் தங்களை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள மொபைல் போனில், ‘vote’ என டைப் செய்து ஒரு, ’space’ விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, ‘51913′ என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், வாக்காளரின் பெயர், அவர் வசிக்கும் தொகுதியின் பெயர், ஓட்டளிக்க வேண்டிய மையத்தின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் பதிலாக கிடைக்கும்.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: சமுதாய செய்திகள்
Share your views...
1 Respones to "வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியலாம்"
Useful service
Well done
20 ஜூலை, 2010 அன்று 10:13 PM
கருத்துரையிடுக