யுனிகோட் எழுதிகள்



மென்பொருள்

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு


எ-கலப்பை – 3
இதனைக்கணினியில் ஏற்றுவது மிகவும் சுலபமானது.
இதுவரை கணினியில் தமிழை உள்ளீடு செய்ய வேறு செயலிகளை பயன்படுத்திவந்தவர்கள் இதனைப்பயன்படுத்திப்பார்க்கலாம். இந்த செயலி பழைய ‘எ-கலைப்பை 1.0′ போன்று keyman ஐப் பயன்படுத்தவில்லை. இது முற்றிலும் ஒரு ‘திறந்தமூலநிரலி’ யின் துணையுடன் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பான அம்சம்.


nhmஎன்.எச்.எம் எழுதி  (NHM Writer)
ஒருங்குறித்தமிழை உள்ளீடு செய்ய இன்னுமொரு சிறிய செயலி. மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.

e_nila_small எழில்நிலா வலைத்தள யுனிகோட் தமிழ் தட்டெழுதி.
வலைத்தளத்திலிருந்தவாறே ஒருங்குறியில் (யுனிகோட்) தமிழ் தட்டெழுதுவதற்கான ஒரு செயலி.



sarmaசர்மாஸ் சொல்யுஷன்ஸ் மென்பொருள்
தமிழில் சொற்பிழைச்சுட்டி மென்பொருள், அடிப்படை தமிழ் இலக்கணப் பிழைச்சுட்டி, யூனிகோடு மாற்றம் மற்றும் யூனிகோட் முறையை ஆதரிக்கும் இந்திய மொழிகளில் உள்ள தகவல்/கோப்பை மற்ற மொழி எழுத்துருக்களுக்கு மாற்றித்தரும் வகையில் உருவாக்கப்பட்ட Transliteration or Script Conversion.


azhagi‘அழகி’ தமிழ் மென்பொருள்
தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டு மென்பொருள். விண்டோஸின் அனைத்து செயலிகளிலும் நேரடியாகவே தட்டச்சு செய்ய வல்லது – யூனிகோட், திஸ்கி இரண்டிலும் – ஒலியியல், தமிழ்நெட் 99,  தமிழ்’ தட்டச்சு என்ற மூன்று விசைப்பலகை முறைகளிலும். உலகின் முதலாம் ‘இரு திரை’ ஒலிபெயர்ப்பு கருவி கொண்டது. திஸ்கியிலிருந்து யூனிகோடிற்கு மாற்ற bulk Unicode converter (ஒரே நேரத்தில் பல நூறு திஸ்கி கோப்புகளை மாற்றும்) வசதி கொண்டது. திஸ்கி to தாப் உரை எழுத்துரு மாற்றமும் கொண்டது. திஸ்கி / யூனிகோட் இவை இரண்டிலுமே வலைப்பக்கங்கள் அமைக்க டைனமிக் ஃபான்ட் கொண்டது. விரிவான யூனிகோட் உதவிக் கோப்புகளை உள்ளடக்கியது.


murasuமுரசு அஞ்சல்
தமிழை உள்ளீடு செய்யும் ஒரு செயலி. திஸ்கி மற்றும் யுனிகோட் எழுத்துக்களை இதன் உதவியுடன் உள்ளீடு செய்ய முடியும். அதனுடன் எழுத்துரு மாற்றி மற்றும் மின்னஞ்சல் போன்ற பல செயற்பாடுகளை இது செய்கின்றது. அத்துடன் பல தமிழ் வலைப்பக்கங்களில் தமிழை வாசிக்கவும் இந்த செயலி உதவி புரிகின்றது.


kuralகுறள் தமிழ்ச் செயலி
மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர்களிலும் தமிழை உள்ளீடு செய்ய பயன்படுகிறது.
இதன் சிறப்பம்சங்கள் தமிழில் UNICODE, TSC, TAB, TAM, LIPI போன்ற எழுத்து வகைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம். தமிழில் அனைவரும் விரும்பும் ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகையும் தமிழ் 99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகையும் புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகைகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


googleLogoகூகிள் தமிழ் யுனிகோட் எழுதி
தமிழ் மட்டுமன்றி இன்னும் பல இண்டிக் மொழிகளில் தட்டெழுதக்கூடிய ஒரு தளம்.
தமிழ் யுனிகோட் எழுத்துருக்கள்
தேனீயுனிகோட் – TheneeUniTx (zip file) TheneUniTx.ttf (TTF File)
தமிழ் யுனிகோட் ஆவரங்கால் - aava1 (zip), aava1 (ttf)
TSCuthamba – யுனிகோட் எழுத்துரு – சென்னை நெட்வேர்க்
தமிழ் யுனிகோட் இளங்கோ பாரதி - tau1_bar.ttf
மேலே தொகுத்தளிக்கப்பட்டிருக்கும் செயலிகள், எழுத்துருக்கள் என்பனவற்றை வழங்கியிருக்கும் அனைத்து கணினி வல்லுனர்களுக்கும் மிக்க நன்றிகள்.

இப்பதிவு பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை “உங்கள் கருத்துக்கள்” பகுதியில் பதிவு செய்யுங்கள்!

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |



உங்கள் கருத்தினை பதிய 2 comments


 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info