இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்கும் மிகப்பெரிய கணினி நிறுவனம்



மடிக்கணினி (லேப்டாப்)  என்ற வார்த்தையை கேட்டதும் நமக்கு உடனடியாக ஞாபகம் வருவது DELL லேப்டாப் தான் அந்த அளவிற்கு தன் சேவையால் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்திருக்கும் இந்த நிறுவனம் இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்குகிறது இதைப்பற்றித் தான் இந்தப் பதிவு.
  
தொழில்நுட்பத்தின் உச்சகட்ட காலம் என்று தான் இதை சொல்ல வேண்டும். டெஸ்க்டாப் கணினி மாறி லேப்டாப் கணினியையும் காணாமல் செய்யும் நோக்கில் இப்போது பிளாக்பெரி என்று சொல்லக்கூடிய அலைபேசி அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வருகிறது. இன்னும் நாங்கள் லேப்டாப் தான் விற்று கொண்டிருப்போம் என்று சொல்லாமல் காலத்தின் மாற்றத்திற்கு தகுந்தபடி மிகப்பெரிய நிறுவனமாக டெல் நிறுவனம் மொபைல் துறையில் கால் வைக்க இருக்கிறது. இனி லேப்டாப் பயன்படுத்துபவர்கள் குறைவாகத்தான் இருக்கப்போகிறார்கள் என்பதை நன்கு அறிந்து தான் இந்த முயற்சியில் இறங்கியுள்ள்னர். மொபைல் உருவாக்க வேண்டும் அதையும் இந்தியாவில் தான் முதலில் தொடங்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். அதிகமான மக்கள் மொபைல் பயன்படுத்தும் நாட்டில் இந்தியாவும் முன்னனி இடத்தில் இருக்கிறது என்ற காரணத்தினாலும் இவர்கள் இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளனர்.ஆண்டிட்ராய்டு
 தொழில்நுட்பத்துடன் பிளாக்பெரி போன்ற அலைபேசியை உருவாக்கி இருக்கின்றனர், விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டம் இதில் துனைபுரியும் என்றும் இதற்கு DELL Lightning என்ற பெயரும் வைத்துள்ளனர். யூடியுப் ,கூகுள் மேப்ஸ்,கூகுள் டாக், ஜீமெயில் போன்ற பல வசதிகளுடன் விரைவில் டெல் நிறுவனத்திடம் இருந்து அவர்கள் உருவாக்கி இருக்கும் மொபைல் பற்றிய முழுதகவல்களும் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். 

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |




Share your views...

0 Respones to "இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்கும் மிகப்பெரிய கணினி நிறுவனம்"

 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info