மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்



சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர்  கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி  தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது.மேலும் புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா உறுதி அளித்தார்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


கலீஃபா உமர் வரலாற்றை தமிழில் மொழிபெயர்த்தவருக்கு சாகித்ய அகாடமி விருது



தூரநாடு ஹனீப் என்பவர், மலையாளத்தில்  உமர் கலீபாவின் வாழ்க்கை வரலாற்றினை ஒரு நாவல் வடிவில் எழுதிப் பிரபலம் பெற்றிருந்தார். அந்த  நாவலை "செங்கோல் இல்லாமல், கிரீடம் இல்லாமல்' என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருந்தார் நிர்மால்யா (பரிசுத்தம்)  என்னும் ஒரு புதுமுகத் தமிழ் எழுத்தாளர் . அதற்காக அந்த மொழி பெயர்ப்பாளருக்கு  சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி  விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமுக எழுத்தாளர் நிர்மால்யாவின் இயற்பெயர் மணி என்பதாகும். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.  ஊட்டியில் எழுதுபொருள் விற்பனை கடை வைத்திருக்கும் மணியின் சிந்தையில் எழுதுபொருளாக முஸ்லிம்களின் இரண்டாம் கலீபாவுடைய வாழ்க்கை இடம்பிடித்தது வியப்பிற்குரியதே.

மணி என்கிற எழுத்தாளர் நிமால்யா இதுவரை 11 மலையாள நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளார்.

நீலகிரியைச் சேர்ந்த ஓர் இலக்கியவாதிக்கு சாகித்ய விருது கிடைப்பது இதுவே முதன் முறை. நிர்மால்யா என்கிற மணி கூறுகையில், ""தேசிய அளவிலான இலக்கிய தளத்தில் எனது எழுத்துக்கும் அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி; கலை, இலக்கிய உணர்வு அற்றுப்போன நீலகிரி மண்ணில் இருக்கும் எனக்கு கிடைத்திருக்கும் இந்த விருது, இங்குள்ள இளைஞர்கள மத்தியில் இலக்கிய தாகத்தை ஏற்படுத்தினால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்,'' என்றார்.

நீலகிரிக்கு அடுத்துள்ள கோவையைச் சேர்ந்த கவிஞர்கள் புவியரசு, சிற்பி ஆகியோர் ஏற்கனவே, சிறந்த மொழி பெயர்ப்பு மற்றும் படைப்பிலக்கியங்களுக்காக தலா 2 முறை சாகித்ய அகாடமி  விருதுகளைப் பெற்றுள்ளனர்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


இளம் வயது இந்தியரை ஈர்க்கும் இணையச் சூழல்




அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் இணையத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக உயரும் என்று இது குறித்து ஆய்வு நடாத்திய பாஸ்டன் கன்சல்டிங் குரூப் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் இணைய பயனாளர்கள் எண்ணிக்கை 8.1 கோடியாக உள்ளது. இது 2015ஆம் ஆண்டில் 23.7 கோடியாக உயரும் என்று ‘இணையத்தின் புதிய 100 கோடி’ என்று தலைப்பில் ஆய்வு செய்த பாஸ்டன் கன்சல்டிங் குரூப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் பிரேசில், இரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.2 பில்லியனாக (1 பில்லியன் = 100 கோடி) உயரும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

“இந்த 4 நாடுகளிலும் இளம் வயதினர் மிக அதிகமாக இணையச் சூழலிற்கு ஈர்க்கப்படுகிறார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டிற்கு 20 விழுக்காடு அதிகரித்து வருகிறது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

உலக நாடுகளில் தகவல் தொடர்பு அயல் பணிக்கு (Business Process Out-sourcing - BPO) மிகவும் உகந்த நாடாக இந்தியா உள்ளதென, இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட ஏடி கியர்னி நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2011இல் உலக சேவைகள் இட குறியீடு (Global Services Location Index - GSLI) என்ற ஆய்வை, கணினி அயல் பணி செய்யும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏடி கியர்னி நிறுவனம் நடத்தியுள்ளது. தனது ஆய்வில் கிடைத்த விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ள ஏடி கியர்னி நிறுவனம், “இந்தியாவே முதன்மை நாடாக உள்ளது. 

                       

அயல் பணித் தேவை எப்படிப்பட்டதாக இருப்பினும் அதற்குரிய பணியாளர் சக்தியை அளிக்கும் நாடாகத் திகழ்கிறது. வேகமான போக்குவரத்து வசதிகள்(!), ஆழமான திறன் உள்ளமை ஆகியவற்றால் உலக அளவில் அளிக்கப்படும் அயல் பணி வாய்ப்புகளை இந்தியா பெறுகிறது” என்று கூறியுள்ளது. 

உலக சேவைகள் இடக் குறியீட்டின் படி, இரண்டாவது இடத்திலுள்ள சீனாவை விட 0.5 புள்ளிகள் அதிகம் பெற்றும், மலேசியாவை விட 1 புள்ளி அதிகம் பெற்றும் முதலிடத்தில் இந்தியா உள்ளது என்று கூறியுள்ள ஏடி கியர்னி ஆய்வு, இந்தியா முதலிடத்தில் உள்ளதற்குக் காரணம் அதன் ஈடிணையற்ற திறன் கொண்ட பணியாளர்களும், பணியை நிறைவேற்ற ஆகும் குறைந்த செலவும் ஆகும் என்று கூறியுள்ளது. 

தகவல் தொழில் நுட்ப அயல் பணியில் உருவாகும் போட்டிகளை சமாளிக்கவும், அதனையும் தாண்டி தன்னை நிரூபிக்கவும், அத்துறையில் புதிதாக எழும் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் திறனும் இந்தியாவை அயல் பணித் துறையில் தலைமையிடத்தையும், மிகச் சிறந்த நாடாகவும் உயர்த்தியுள்ளது என்று கூறியுள்ளது. 

ஆங்கில மொழித் திறன் மட்டுமின்றி, அயல் பணியாற்ற உகந்த திறனைப் பெறக்கூடிய கல்வி நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான தகுதியுடைய பணியாளர்களை உருவாக்குவதும் இந்தியாவை இத்துறையில் தனித்த நாடாக முன்னிறுத்துகிறது என்று கூறியுள்ள அந்த ஆய்வறிக்கை, தாங்கள் அளிக்கும் சேவையில் தனி முத்திரை பதிக்கும் அளவிற்கு மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளிலும் இந்தியாவின் அயல் பணி நிறுவனங்கள் உள்ளதெனவும், அதில் இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியன முன்னணியில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

அயல் பணியில் உலகின் முதல் பத்து நாடுகளில் முதலிடத்தில் இந்தியாவும், இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் மலேசியாவும், இந்தோனேஷியா 5வது இடத்திலும், தாய்லாந்து 7வது இடத்திலும் வியட்நாம் 8வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 9வது இடத்திலும் உள்ளன.

கால் செண்டர்களில் சீனா பெரிதாக பங்கு பெறவில்லை என்றாலும், அதிக திறன் தேவைப்படும் பகுப்பாய்வு, உயர் தகவல் தொழில் நுட்பப் பணிகளில் மேற்கத்திய நாடுகளுக்கு அது போட்டியாக வளர்ந்து வருகிறது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது. 

நன்றி-தமிழ்




கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் சகோ. அப்துல் ரஹ்மானுடன் தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி ஆகியோர் இமயம் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம்.



வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் சகோ. அப்துல் ரஹ்மானுடன் தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி ஆகியோர் இமயம் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம்.


   

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments


எ-கலப்பை 3.0 – மென்பொருள் அறிமுகம்



 
‘தமிழா’ நிறுவனம் தமது புதிய தயாரிப்பான எ-கலப்பை 3.0 ‘தமிழ் எழுதி’ செயலியின் இறுதிப்பதிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றது.
இதனைக்கணினியில் ஏற்றுவதும் அதனைப்பயன்படுத்துவதும் மிகவும் சுலபமானது.
இதுவரை கணினியில் ‘யுனிகோட்’ தமிழை உள்ளீடு செய்ய வேறு செயலிகளை பயன்படுத்திவந்தவர்கள் இதனைப்பயன்படுத்திப்பார்க்கலாம்.
இந்த செயலி பழைய ‘எ-கலைப்பை 1.0′ போன்று மூன்றாம் தரப்பு செயலியான ‘கீமேனை’ப்பயன்படுத்தவில்லை. இது முற்றிலும் ஒரு ‘திறந்தமூலநிரலி’ யின் துணையுடன் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பான அம்சம்.

இச்செயலி Tamil99 , Phonetic, Typewriter, Bamini, Inscript ஆகிய 5 விதமான விசைப்பலகைகளைக்கொண்டு யுனிகோட் தமிழை உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் விசைப்பலகையை மாற்றுவதற்கான விசைகளை உங்களுக்கு விருப்பமான தெரிவாக அமைத்துக்கொள்ளலாம்.  கீழேயிருக்கும் படங்கள் இவற்றை விளக்குகின்றன.
இதனை வடிவமைத்து வெளியிட்ட முகுந்த் மற்றும் அவரின் நண்பர்களின் அயராத உழைப்புக்குப் பாராட்டுக்கள்!
இதனைத்தரவிறக்க கீழேயிருக்கும் சுட்டியை அழுத்தவும். (5.19MB)



ஒரு சில விளக்கப்படங்கள் கீழே..


இப்பதிவு பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை “உங்கள் கருத்துக்கள்” பகுதியில் பதிவு செய்யுங்கள்!

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


எகிப்து எழுகிறது - இஸ்ரேல் அழுகிறது!



எகிப்தில் தொடராக எட்டாவது நாளாக இடம் பெற்று பேரணியால் தலைநகர் கெய்ரோ ஸ்தம்பித்தது. எனினும்அதிபர் ஹுஸ்னி முபாரக் பதவி விலக மறுத்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. எகிப்து மக்களின்போராட்டம் நேற்றும் 8வது நாளாக நீடித்தது.  சுமார் 10 லட்சம் பேர் தலைநகர் கெய்ரோவை நோக்கி படை எடுத்திருந்தனர். ஹுஸ்னி முபாரக்கை எகிப்தை விட்டு வெளியேறும் படி அவர்கள் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்த இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தும் இராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் முபாரக் தயார் என அறிவித்தும், அதனை ஏற்றுக்கொள்ள யாரும் முனவரவில்லை.

இதேவேளை தனது சகாவான முபாரக்குக்கு ஆதரவு திரட்டி இஸ்ரேல் ஐப்ரோபிய நாடுகளில் தனது தூதரகங்கள் ஊடாக பிரசார நடவடிக்கைகளை தீவிரமாக்கும் படி அந்தந்த நாட்டிலுள்ள இஸ்ரேலர்களுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறது.

எகிப்தில் முபாரக்கின் வீழ்ச்சி பலஸ்தீனின் ஹமாஸை வலுவான சக்தியாக மாற்றும் என்று இஸ்ரேல் அச்சம் தெரிவித்திருக்கிறது.  அதேவேளை தான் வளர்த்த முபாரக்கை கைவிட்டது போல் நடிக்கும் அமெரிக்க சந்தேகத்திடமான ஒரு பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்திருக்கிறது. எகிப்து தொடர்பாக அமெரிக்காவின் அண்மைய நிலைப்பாடு மாறுபட்டிருக்கிறது. 

எகிப்தின் முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் தொடர்ச்சியாக எட்டாவது நாளையும் கடந்து வீரியத்துடன் நடந்து வரும் நிலையில், 
"எகிப்து மக்கள் அமெரிக்கா முபாரக்கிற்கு ஆதரவளிப்பதாக தவறாக நினைத்துள்ளனர். அமெரிக்கா ஹுஸ்னி முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை" என அமெரிக்க செனட்டர் ஜோன் கெர்ரி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திடீரென நியாயத்தின் பக்கம், மக்கள் பக்கம் சாய்ந்தது போன்ற அதன் நிலைப்பாட்டில் விபரீதம் ஒன்று மறைந்திருப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டையும் உணர முடிகின்றது.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை  இஸ்ரேல் கடுமையாக சாடியுமுள்ளது. "முபாரக்கின் அரசு கவிழ்ந்தால் எகிப்தின் முஸ்லிம் சுசகோதரத்துவக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை மோசமாகும். உலக நாடுகளுக்கும் பிரச்னை அதிகரிக்கும்" என இஸ்ரேல் அமைச்சர் அயூப்கரா அச்சம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இந்த கலக்கத்தைப் பார்க்கும் போது மத்தியக்கிழக்கில் அதன் சண்டித்தனத்திற்கு துணை போனவர்களாக இந்த அரபுத் தலைவர்கள்   திகழ்ந்திருக்கின்றார்கள என்ற உண்மையை புரியக் கூடியதாக இருக்கிறது.

இதேவேளை Gulf Civil Society Forum (GCSF) என்ற அமைப்பு ஹுஸ்னி முபாரக்கிற்கு உதவி புரியும் அரபு தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளது.  தொடர்ந்தும் இத்தகைய அடக்கு முறையாளர்களுக்கு உதவி செய்வதை உடனடியாக நிறுத்தும் படி வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info