அரிதார அரசியல்




'சில ரொட்டித் துண்டுகளும் ஒரு சர்க்கஸ் கோமாளியும் போதும் மக்களை ஏமாற்றுவதற்கு' - ஹிட்லர். 

நீதிக்கட்சியின் பரிணாமத் தோற்றமான திராவிட இயக்கம் தமிழகத்துக்கு எண்ணிலடங்கா பல நன்மைகளை விட்டுச் சென்றுள்ளதை தமிழகத்தின் ஐம்பதாண்டு  கால அரசியல் தெரிந்த எவராலும்  மறுக்கவியலாது. ஏன் இந்திய அரசியலுக்கே சமூக நீதி தத்துவத்தைப் பாடம் படித்துக் கொடுத்தது, திராவிட இயக்கம்தான் என்று யாரேனும் விளக்கவுரை எழுதினாலும் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல என்ற ஒரு முடிவுக்கே அடிமட்ட மக்களுக்கான அரசியல் பேசுபவர்கள் வருவர்.

ஏனெனில், வி.பி.சிங் அவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வரையிலான இந்திய அரசியலின் தன்மை அத்தகைய முடிவுக்கே நம்மையும் இட்டுச் செல்லும். அதே சமயம்  திராவிட இயக்கம் வழங்கிய இந்த 'சமூக நீதி தத்துவம் சில குறைபாடுகளுடன் இருந்தாலும் அவற்றை நாம் போற்றுவதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். Something is better than nothing.
கடுமையான வயிற்றுப் பசியுடன் இருப்பவர்களுக்கு அவர்களது பசியாற்றக் கிடைக்கும் நீரும் சோறும் அமிர்தம் போலவே தித்திக்கும் என்னும் அடிப்படையினூடாகவே இத்தகைய குறைபாடுகளுடன் கூடிய சமூக நீதியை நாம் ஆதரிக்கிறோம்.

மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு சித்தாந்தத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு என்பதுதான் அடிப்படை விதி.  அந்த சித்தாந்தத்தினால் விளைந்த நன்மைகள் என்று பலவற்றை நாம் பட்டியலிட்டுச் சொன்னால், மறுபக்கம் அதே சித்தாந்தம் உருவாக்கிய தீமைகள் என்று பலவற்றையும் வரலாறு நமக்கு பட்டியலிட்டுச் சொல்கிறது. இத்தகைய அடிப்படை விதிகளுக்கு திராவிடச் சித்தாந்தமோ கம்யூனிசச் சித்தாந்தமோ இன்னும் மனிதர்களால்  உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட எந்த ஒரு சித்தாந்தமோ  விதிவிலக்கல்ல.

திராவிடச் சித்தாந்தத்தின் அரசியல் பரிணாமமாய் உருவெடுத்த  திராவிட முன்னேற்றக் கழகம்  தமிழகத்துக்கு இழைத்த மிகப்பெரிய தீமைகளில் ஒன்றாக இலவச - கவர்ச்சி அரசியலை கூறலாம்.

மக்கள் நலத் திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு கவர்ச்சிகரமான பேச்சுக்களையும், திரைப்படத்துறையில் தோன்றிய முகங்களின் கவர்ச்சியையும் வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற ஓர் அவல நிலைமை தோன்றியதே திராவிட முன்னேற்ற கழக அரசியலின் எழுச்சியில்தான்.

கவர்ச்சி அரசியலுக்கு மக்கள் எந்தளவுக்கு மயங்கினார்கள் என்பதை காமராஜரின் தோல்வியை வைத்தே எடைப் போட்டு விடலாம். இதுவரை தமிழ்நாட்டில் முதல்வர் பதவி வகித்தவர்களில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் யாரென்று கேட்டால் எல்லோரும் உடனே பதில் சொல்லி விடுவர், 'காமராஜர்' தான் என்று. அப்படிப்பட்ட ஒரு சிறந்த முதல்வரை, பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியவரையே தோல்வியடைய செய்யக் கூடிய அளவிற்கு மக்கள் ஒருவித கவர்ச்சி மயக்கத்தில் இருந்தனர் என்பது இந்த மாய அரசியலின் தீமைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

வழக்கமாக, தமிழகக் கடற்கரையோரம் மையம் கொள்ளும் புயல் ஆந்திராவின் கடற்கரையோரத்தைப் பதம் பார்ப்பது போல தமிழகத்தில் தோன்றிய இந்த இலவச - கவர்ச்சி அரசியல் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் அரசியலையும் பதம் பார்த்தது. அங்கும் திரைப்படத்துறை கவர்ச்சி முகங்கள், அரசியலின் தீர்மானிக்கும் காரணிகளாக மாறிப்போன அவலம் அரங்கேறியது.

இத்தகைய செயல்களால்  தமிழகமும் ஆந்திரப் பிரதேசமும் அறிவுஜீவிகளால் ஏளனமாக பார்க்கப்பட்ட காலமும் உண்டு. இன்றும் கூட தமிழ்நாடும் ஆந்திரமும் இந்தக் கவர்ச்சி மாயையில் இருந்து விடுபடவேயில்லை. தேர்தல் காலங்களில் அரசியலை  நாம் கூர்ந்து நோக்கினால் இந்த உண்மை எளிதில் புரிந்துவிடும். கட்சிகளுக்கு சற்றும் சம்பந்தமில்லாத, ஆனால் திரைப்படத்தில் நடித்த ஒரு சில 'முகங்கள்' சில தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர். அந்த கவர்ச்சி முகங்களின் தரிசனங்களுக்காக  மக்களும் மந்தைக் கூட்டங்களாய் மாறி கால்கடுக்க நிற்கின்ற இழிநிலையும் தொடரத்தான் செய்கின்றது.

இன்றைக்கு இந்தியா முழுவதும்  பன்றிக்காய்ச்சல் எப்படி வேகமாக பரவுகிறதோ அதைவிட மிக வேகமாய் பரவி விட்டது இந்த இலவச - கவர்ச்சி அரசியல். பன்றிக்காய்ச்சல் எங்கே தன்னைத் தொற்றி விடுமோ என்றஞ்சி முகக்கவசம்  அணிந்து  தன்னை தற்காத்துக் கொண்ட மக்கள் அதைவிடக் கொடிய அரசியல் நோயான இந்த இலவச - கவர்ச்சி அரசியலை தடுக்காமல் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தது நாடெங்கும் இதை இன்னும் வீரியமாக பரவச் செய்து விட்டது.

திராவிட, தேசிய, பிராந்திய பேதங்கள் எல்லாம் இந்த மாய கவர்ச்சி அரசியலுக்கு கிடையாது. இந்துத்துவம் பேசும் பா.ஜ.க, போலி மதச்சார்பின்மை வேடம் தரிக்கும் காங்கிரஸ், மத்தியில் ஆட்சிக்கு வரும் ஏதாவது ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி  வைப்பதையே பிரதான  கொள்கைகளாகக் கொண்டிருக்கும் பிராந்திய கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி போன்ற எந்த கட்சியானாலும் இந்த அரிதார கவர்ச்சி அரசியலில் இருந்து தப்ப முடியவில்லை. இந்த கட்சிகளுக்கு முகம் கொடுக்கும் நட்சத்திரங்களின்  தேவையை கட்சிகளின் தலைவர்கள் பார்த்துக் கொள்ள தலைவர்களின் தேவையான ஓட்டு அறுவடையை நட்சத்திரங்கள் பார்த்துக் கொள்ள அவர்களுக்கிடையே  ஓர் புரிதலில் சென்று கொண்டிருக்கிறது இந்த மாய அரசியல்.

'மற்ற துறைகளைச் சார்ந்தவர்கள் அரசியலுக்கு வரும்போது, நாங்கள் மட்டும் வருவது தப்பா?' என்ற ஓர் கேள்வியை திரைப்படத்துறையினர்  எழுப்புகின்றனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது இது நியாயமான கேள்வியாகவே நமக்குத் தெரியும். ஆனால், இதை அறிவுபூர்வமாக பார்த்தோமேயானால் இந்தக் கேள்வியின் தொனியே அடிப்படை ஆதாரமற்றது என விளங்கி விடும்.

உதாரணமாக மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும்போது கைது செய்யப்பட்ட ஒரு ஆன்மீகவாதி  மக்களின் அறியாமையை பயன்படுத்தி நான் மட்டுமா ஏமாற்றுகிறேன்? அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் மக்களை ஏமாற்றுகிறார்களே? என்ற ஒரு கேள்வியை எழுப்புவதால் கைது செய்யப்பட்ட அந்த ஆன்மீகவாதி புனிதராகி  விடமுடியாது. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு எவ்வாறு தீர்வாகி விட முடியும்?

வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் இருக்கின்ற சர்வதிகாரி ஹிட்லரின் வாசகத்தை வரலாற்றாசியர்களை விட இந்திய அரசியல்வாதிகள் மிகத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றனர். இது நவீன காலமென்பதால் ரொட்டித் துண்டுகள் இருக்க வேண்டிய இடத்தில்  வேறு சில இலவசங்களும், சர்க்கஸ் கோமாளி இருக்க வேண்டிய இடத்தில் மக்களின் மனதில் நன்றாக பதியக் கூடிய வேறு சில துறையைச் சார்ந்தவர்களும் இருக்கின்றனர். 

மக்களிடையே மலிந்து காணப்படும் அறியாமையை  மூலதனமாக்கி தன்னுடைய திரைத்துறை  போலி  பிம்பத்தை மக்களிடையே நிலைப்படுத்த அதாவது நிழலை நிஜம் என்று  நம்ப வைக்க மக்களை மந்தைகளாகப் பாவிக்கும் இவர்களை, அறிவுஜீவிகள் மக்களுக்கு அடையாளம் காட்ட தவறினால்,

"பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு."

என்று வள்ளுவன் சொன்னது போல இந்த நாட்டில் சிறப்பில்லாத பிறப்புக்கள் அரசியலில் தோன்றிக் கொண்டேயிருக்கும்.
நன்றி: விகடன், திண்ணை.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


இந்த தீர்ப்பை கூற நீதிபதிகள் தேவை இல்லை: சன் நியூஸ் நேருக்கு நேர் நிகழ்ச்சி! (வீடியோ)





பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து சன்நியூஸ் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஆர் எஸ் எஸ் இயக்க பிரமுகருடன் நேருக்கு நேர் விவாதிக்கப்பட்டது.


இதில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முத்து கிருஷண்ன் இந்த தீர்ப்பை கூற நீதிபதிகள் தேவையில்லை மரத்தடியில் வெற்றிலை போட்டு பார்ப்பவன் போதும் எனக் கூறி தீர்ப்பு முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது என்பதை ஆதாரங்களுக்கு விவரிக்கின்றார்.

இந்த விவாதம் முஸ்லிம் பிரமுகர்களை வைத்து நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது,

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளிக்க நீதிமன்றங்களுக்கு அனுமதி இல்லை என்ற அரசின் தீர்மானத்தை ஆதாரமாக சுட்டிக்காட் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பமானது என்பதை விவரிக்கும் முத்து கிருஷண்ன் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடும் ஆர் எஸ்.எஸ் பிரமுகர்..

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவங்களில் இலவசமாக M.E/M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு




GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Tech  படிக்க மத்திய அரசால்  நடத்தப்படும் தேர்வாகும்.  இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது. இந்த தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம்.  இதில் முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய http://www.gate.iitb.ac.in/gate2011/
 
இந்தியாவில் 8 இடங்களில் உள்ள  IIT, 20 இடங்களில் உள்ள  NIT,  டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில்  M.E/M.Tech, Phd  படிக்க GATE  என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது,  இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது). இந்த கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது. நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview)  மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன.


இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை.  தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கட்டுரை நமது tntj.net (www.tntj.net/?p=8622) இணையதளத்தில் உள்ளது. 
 
பெற்றோர்களே!

நுழைவு தேர்வு இல்லாமல் நேரடியாக படிக்க சில லட்சம் ரூபாய் செலவாகும், ஆனால் இந்த தேர்வு மூலம் பணம் வாங்கி கொண்டு படிக்க முடியும். எனவே கல்வி கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவங்களுக்கு நாம் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொடுக்காமல் நீங்கள் மேற்படிப்பு படிக்க இது போன்ற தேர்வை எழுத சொல்லுங்கள். மாணவர்களும் மேற்படிப்பு என்றாலே லட்சங்களை பெற்றோர்காளிடம் இருந்து பெறவேண்டும் எண்ணத்தை மாற்றி இது போன்ற நுழைவு தேர்வை எழுதி குடும்பத்தின் சுமையை குறைத்து நீங்களும் நல்ல கல்வியை பெற்று அதிக சம்பளத்தில் வேலையில் சேருங்கள் இன்ஷா அல்லாஹ்.
 
பெரும்பாலும் நாம் படிப்பது நமது கல்வி தரத்தை உயர்த்திகொள்வதற்க்கும், நல்ல வேலையில் சேர்ந்து நல்ல சம்பளம் பெறுவதற்க்கும், வெளி நாடுகளில் சென்று படித்து சிறந்த கல்வியை பெற்று நல்ல சம்பளத்துடன் நல்லவேலையில் சேர்வதற்க்கும்தான். கல்வி துறையில் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற நுழைவு தேர்வு தேர்வுகளை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும். ஏதோ எல்லாரும் படிக்கின்றனர் நானும் படிக்கின்றேன் என்று இருந்துவிடக்கூடாது, பணத்தை வைத்து  கல்லூரியில் இடம்தான் வாங்கமுடியும், படிப்பை வாங்கமுடியாது, வேலையையும் வாங்க முடியாது, நன்றாக படித்தால் தான் நல்ல வேலைகிடைக்கும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள்,  எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ். 

S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவரணி
 
GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 27, ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். http://onlinegate.iitm.ac.in/iitweb

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : சென்னையில் உள்ள IIT மற்றும் குறிபிட்ட  State Bank of India  கிளைகள்  (தபால் மூலமும் விண்ணப்பம் பெறலாம்.)

விண்ணப்பத்தின் விலை : ரூ.1,000 (ஆன்லைனில் ரூ.8,00)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Chairman, GATE Office, Indian Institute of Technology Madras, Chennai 600 036,

மேலதிக விளக்கம் பெற தொடர்புகொள்ள வேடிய தொலைபேசி எண் : 044-2257 8200 (சென்னை IIT)

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :

 1. B.E/B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.

 2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்.

 3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்.

தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 13,

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : மார்ச் 15

GATE தேர்வு பற்றி மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்க அஹமது இப்ராஹிம் -  9841464521  அல்லது E-mail to  sithiqu.mtech@gmail.com

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆயங்குடியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம்



கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் 17ஆம் தேதியன்று   இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பொதுக் கூட்டம் நகர தலைவர் ஏ.ஹச் .முஹமத் ஹனிப் தலைமையில் நடைப்பெற்றது நகர ஜமாதுல் உலமா சபை தலைவர் மௌலானா முஹமத் மன்சூர் கிராஅத் ஓதினார், ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி ஏ.எம்.இத்ரிஸ்.மற்றும் அனைத்து மஸ்ஜிதுகளின் முத்தவல்லிகள் முன்னிலை வகித்தனர் நகர முஸ்லிம் லீக் பொருளாளர் ஹெச்.முஹமத் இக்பால் வரவேற்றுப்பேசினார் இக்கூட்டதில் காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.சிறப்புரையாற்றினர் மௌலானா பி.ஏ.ஜபார் அலி.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் ,முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் இஸ்மாயில் ,பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷித் ஜான் ஆயங்குடி ஊராட்சி தலைவர் நாகராஜன் மாவட்ட தலைவர் தலைவர் கே.ஏ.அமனுல்லா , துணைத்தலைவர் எம்.ஐ.அப்துல் வதுத், செயலாளர் ஏ.சுக்கூர் தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


உலகை தன்பக்கம் ஈர்க்க வரும் புதிய கண்ணுக்குத் தெரியாத iphone 5G





iphone 5 மீண்டும் உலகத்தில் உள்ள அனைவரையும், தன பக்கம் ஈர்த்து மாற்றப்போகிறது. iphone னை நாம் அடுத்த தலைமுறை கைபேசி என்று கூறிவருகிறோம். அதை மாற்ற அதன் புதிய வடிவமைப்பு iphon 5 வெளிவர இருக்கிறது. iphone 5G, 8MP கேமராவை கொண்டுள்ளது, Sony நிறுவனம் இதில் உள்ள லென்ஸ் மாதிரி மற்றும் 4G network உதவியை வழங்கியுள்ளது. இந்த அழகிய தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு அருமை.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments


அரசியல்தனமான தீர்ப்பு! – தினமணியின் தலையங்கம்!



ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.


கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும் என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதுபோல இருக்கிறது.

நீதித்துறை வரம்பு மீறுகிறது, நிர்வாக முடிவுகளை நீதித்துறை எடுக்க எத்தனிக்கிறது என்றெல்லாம் அரசியல்வாதிகள் குரலெழுப்பி வந்தனர். இப்போது, அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் அவர்கள் சார்பில் செய்து முடித்திருக்கிறது, யாரும் மூச்சுவிடவில்லையே, ஏன்?

அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, 'ராமஜென்மபூமி' என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதி எஸ்.யு. கானும், நீதிபதி சுதிர் அகர்வாலும் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது.

தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.

அதன் அடிப்படையிலும், 'நம்பிக்கை'யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, 'இது ராமர் ஜென்மபூமிதானா?' என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கைப் பிரச்னைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கிறது.

அடுத்த கேள்வி, ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும், பாப்ரி மஸ்ஜித் என்று இஸ்லாமியர்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது. ஒரு நீதிமன்றத்தின் பணி நம்பிக்கைக்குத் தீர்ப்புக் கூறுவதல்ல. சட்டப்படி, இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல.

மகந்த் ரகுவர்தாஸ் என்பவர் 1885லிலேயே ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் பாபர் மசூதிக் கட்டடத்தின் அருகில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். 1949லில் ராமர் விக்கிரகங்கள் உள்ளே வைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சொத்து ஆளுநர் (ரிசீவர்) நியமிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி பூஜை செய்ய உரிமை கோரிய கோபால்சிங் விஷாரத், ராம் சபூத்ரா பகுதிக்குச் சொந்தக்காரர்களான நிர்மோகி அகாராக்காரர்கள், உத்தரப் பிரதேச சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் ஆகிய மூவரும் உரிமை கொண்டாடித் தொடர்ந்த வழக்குதான், இப்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருக்கிறது.

நல்லவேளை, இதேபோல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ? இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினரிடமும், முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும், தெளிவாக இடம் இன்னாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பெழுதி அதன்மூலம் அரசுக்குப் பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருதினார்கள் என்பதும் தெளிவாகிறது.

நீதிமன்றத்தில் நாம் எதிர்பார்ப்பது சமரசமல்ல. சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். ராமர் கோயில் அப்படியே இருக்கும். 90 சென்ட் இடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டிக் கொள்ளலாம். இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. பிரச்னை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு நீதிமன்றமும் தீர்ப்பும் தேவையில்லையே... ராஜீவ் காந்தியோ, வி.பி. சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்ம ராவோ பிரதமராக இருந்தபோதே இந்த சமரச முடிவை ஏற்படுத்தி இருக்கலாமே...

அரசியல்தனமான இந்தத் தீர்ப்பைக் கேட்க முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இல்லாமல் போய்விட்டார். அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன... வேறென்ன...!


                                                                                                     தினமணி – தலையங்கம்  1-10-2010

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments


 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info