ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட்



ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Halal India Pvt.Ltd) எனும் இந்திய அரசு ட்ங்கீகாரம் பெற்ற ஓர் நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. அது இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்துவகையான உணவுப்பொருட்கள், இறைச்சி வகைகள், அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் போன்ற தயாரிப்புகளுக்கு சட்டப்பூர்வமான ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே முஸ்லிம்கள் உப்யோகிக்கின்றனர். ஹலால் சின்னம்
 பொறிக்கப்படாத பொருட்களை முஸ்லிம்கள் முற்றிலுமாக புறக்கணித்துவிடுகின்றனர் என்பது நடைமுறையாகும்.

ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவில் இதற்கான விழிப்புணர்வு முற்றிலும் இல்லை.  எனவே இந்திய முஸ்லிம்கள் தாம் உபயோகிப்பது ஹலால்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இயலாத சூழ்நிலையில் இருப்பதைத் தவிர்க்கும் விதமாகவே ஹலால் இந்தியா பிரவேட் லிமிடட் எனும் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தலைசிறந்த் முஸ்லிம் அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பரிசோதனை மையங்களைக் கொண்ட நிறுவனமாகும். இந்தியாவின் பிரபல நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அதில் தகுதியானவற்றிற்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. பல நாடுகளில் ஹலால் இந்தியா பிரைவேட் லிட் வழங்கும் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருள்களை மட்டுமே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்ற உறுதி மொழியையும் பெற்றுள்ளது.

இந்த சேவையில் நீங்களும் பங்கேற்கும் விதமாக நீங்கள் ஓர் பயனீட்டாளர் (Consumer) என்ற உரிமையில் கடைகள், Shopping Centre களில் பிஸ்கட், சாக்லேட், மென்பானங்கள் Cool Drinks போன்ற உணவுப்பொருட்கள், இறைச்சி வகைகள், அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் ஆகியவற்றை வாங்கும்போது இதில் ஹலால் சின்னம் பொறிக்கப்படவில்லையே, நாங்கள் இதை எப்படி உபயோகிக்க முடியும் என்பது போன்ற விழிப்புணர்வுக் கேள்விகளைக் கேட்பதன் வழியே அவை விரைவில் ஹலால் சான்றிதழ் பெறுவதற்கு நீங்களும் துணைசெய்யலாம்.

சேவைகள் குறித்த விபரங்களைத் தெர்ந்து லொள்ளவும் த்ங்களது மேலான ஆலோசனைகளை வழங்கவும் பார்க்க.  www.halalindia.co.in 

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |




Share your views...

0 Respones to "ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட்"

 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info