மொபைல் நோய்
இன்று கோட்டையில் இருக்கிறவங்களிருந்து குடிசையில் வாழ்பவர்களிடம் வரை மொபைல் போன் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இது வரவேர்க்க கூடியது என்றாலும் இதனுடைய எதிர்வினைகள் தெரியும் போது அதிர்ச்சிதான் வருகிறது. தொலைதொடர்பு சாதனம் மக்கள் பயன்பாட்டிற்க்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் இதனில் உண்டாகும் ஆபத்துக்கள் அவை அறியாமல் பயன்பாட்டிற்க்கு ஏற்றார் போல் உள்ளன. "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழி மொபைல் போனுக்கு நன்கு பொருந்தும் இன்று மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் உலக மக்கள் தொகையை விட கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. சிகரேட் அடிச்சா எப்படி புற்று நோய் வருமோ அதுபோல் மொபைல் போன் பேசினாலும், கேட்டாலும் புற்றுநோய் வரும் என்று சொல்கிறார்கள். இது வெளிபடுத்தும் கதிர்வீச்சு முலம் புற்றுநோய் செல் வளரும் என்று கூறுகிறார்கள். இவை அதிர்ச்சி அடையகூடியதுதான். கொஞ்சம் அதிகமாகவே யோசிக்கவும் வேண்டியதுதான்.
ஆய்வின் முடிவுகள்:
Food and Drug Administration மற்றும் CTIA - The Wireless Association போன்ற அமைப்புகள் "புற்று நோய் உருவாவதற்கு மொபைல் போனில் போதுமான கதிர்வீச்சு இல்லை" என்கிறது. ஆனால் Environmental Working Group(EWG) மற்றும் World Health Organization(WHO) போன்றவைகள் "பத்து ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போன் பயன்படுத்தினால் மூளை மற்றும் எச்சில் சுரபிகளில் புற்றுநோய் கட்டிகள் வரும் வாய்ப்பு அதிகமா இருக்கும் என்றும் நாம் அன்றாட நடவடிக்கையிலும் பாதிப்பு இருக்கும் மற்றும் இவை பத்து வயதுக்குள் உள்ள சிறுவர்களிடம் அதிக பாதிப்பை உண்டாகும் என்றும் கூறுகின்றார்கள். மொபைல் போனில் (SAR - Sepecific Absorption Rate) எண் அளவு ரேடியோ அலைவரிசையை பெறுகின்றது இதை நம் தலை உருஞ்சுகிறது. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சுகிறதோ அதை SAR ரேட் என கூறலாம். ஒவ்வொரு போனுக்கும் ஒரு SAR ரேட் உண்டு. இவை அதிகமா இருந்தால் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கும் SAR ரேட் அறிய பேட்டரிக்கு கீழ் FCC (Federal Communication Commission)எண் இருக்கும். FCC website சென்று அதன் எண்ணை கொடுத்தால் கதிர்வீச்சின் அளவை அறியலாம். EWG.org website-இலும் சென்றும் பார்க்கலாம்.
அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (E.W.G) சமீபத்தில் ஒரு தீங்கு விளைவிக்கும் செல்போன் பட்டியலை வெளியிட்டது. இதில் அப்பிள், எல்.ஜி, சாம்சங், எச்.டி.சி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன வகை செல்போன்கள் அதிகமாக கதிர்வீச்சு உள்ளது என்று அறிவித்துள்ளது.
அந்த லிஸ்ட்:
மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg
ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3GS)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg
எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg
பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg
சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg
மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg
மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg
பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg
எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg
சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg
ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.
மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கதிர்வீச்சு தலைக்கு செல்லாமல் இருக்க ஹெட்செட் அல்லது ஸ்பீக்கர் பயன்படுத்துவது நல்லது. நாம் பேசும்போதும் text அனும்பும்போதும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். callமற்றும் sms வரும்போதும் கதிர்வீச்சு குறைவாக இருக்கும். எப்படி இருந்தாலும் குறைவாக பேசுவது நலம். "மற்றவை நேரில் பேசலாம்" என்று இனிமையாக சொல்லலாம். இதனை மற்றவரிடமும் கூறுங்கள்.
................சமுக நலன் காப்போம்..............
நன்றி-rkguru.blogspot.com
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: தொழில்நுட்பச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share your views...
0 Respones to "மொபைல் நோய்"
கருத்துரையிடுக