பிடிஎப்-ஐ ஆன்லைன் மூலம் எடிட் செய்யலாம்
பிடிஎப் (PDF) கோப்பில் முக்கியமானவற்றை நாம் தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலம் எந்த பிடிஎப் மென்பொருளும் இல்லாமல் குறித்தும் சேமித்தும் வைத்துக்கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பிடிஎப் கோப்புகளில் பலவற்றை நாம் நம் கணினியில் சேமித்து வைத்திருப்போம் ஆனால் அந்த கோப்பில் சில முக்கியமான வரிகளை குறித்து (மார்க்) வைத்தால் அடுத்த முறை நாம் பார்க்கும் போது எளிதாகவும் உடனடியாகவும் பார்க்கலாம். சில நேரங்களில் பிடிஎப் கோப்பில் முக்கியமான படங்களுக்கு விளக்கம் கூட அருகில் எழுதி வைத்துக்கொள்ளலாம் இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்றால் இதெல்லாம் எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் ஆன்லைன் மூலம் நாம் பிடிஎப் கோப்புகளை மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.இணையதள முகவரி : https://www.pdfescape.com
இந்தத் தளத்திற்கு சென்று நம் பிடிஎப் கோப்-ஐ அப்லோட் செய்ய வேண்டியது தான் அடுத்து வரும் திரையில் நம் பிடிஎப் கோப்பினை எளிதாக எடிட் செய்யலாம். படம் 2-ல் காட்டியபடி இடது பக்கம் இருக்கும் ஐகானை சொடுக்கி எடிட் செய்த பிடிஎப் கோப்பை நம் கணினியில் சேமித்து வைக்கலாம். பிடிஎப் மென்பொருள் இல்லாத இடத்திலும் பிடிஎப் எடிட்டர் பயன்படுத்த தெரியாத புதியவர்களுக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.

படம்-2
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: தொழில்நுட்பச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

Previous Article



Share your views...
3 Respones to "பிடிஎப்-ஐ ஆன்லைன் மூலம் எடிட் செய்யலாம்"
பயனுள்ள பதிவு நன்றிகள்
13 ஆகஸ்ட், 2010 அன்று 12:13 PM
பயனுள்ள செய்தி நன்றி
24 ஆகஸ்ட், 2010 அன்று 6:44 AM
பயனுள்ள செய்தி நன்றிகள்
1 செப்டம்பர், 2010 அன்று 6:33 AM
கருத்துரையிடுக