ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
கடந்த 8 வருடமாக ஈராக்கில் நடைபெற்று வந்த போரை, முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று அறிவித்தார்.
ஒபாமா, அமெரிக்க அதிபராக பதவியேற்ற போது, 2010 ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள், சகல அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வாபஸ் பெறப்படும் என அறிவித்தார்.
அதன் படி படிப்படியாக அமெரிக்க இராணுவத்தினரை ஈராக்கில் இருந்து வெளியேற்றி வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க இராணுவத்தின் இறுதி தாக்குதல் படை பிரிவும் ஈராக்கில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து ஈராக்கிய மக்களிடம் அவர்களது பாதுகாப்பை ஒப்படைக்கும் வரை, சுமார் 50,000 இராணுவத்தினர் இன்னமும் எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அமைச்சரவையில் பேசிய ஒபாமா, ஈராக்கில் இருந்து முற்றாக படைகளை வாபஸ் பெறப்போவதாகவும், இதனால் 8 வருடங்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளதாகவும் அறிவித்தார்.
கடந்த 2003 ம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இனால் ஈராக் மீது யுத்தம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: சமுதாய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share your views...
0 Respones to "ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா"
கருத்துரையிடுக