மொபைல் நோய்



இன்று கோட்டையில் இருக்கிறவங்களிருந்து குடிசையில் வாழ்பவர்களிடம் வரை  மொபைல் போன் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இது வரவேர்க்க கூடியது என்றாலும்  இதனுடைய எதிர்வினைகள் தெரியும் போது அதிர்ச்சிதான் வருகிறது.  தொலைதொடர்பு சாதனம் மக்கள் பயன்பாட்டிற்க்கு  ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் இதனில் உண்டாகும் ஆபத்துக்கள் அவை அறியாமல் பயன்பாட்டிற்க்கு ஏற்றார் போல் உள்ளன.  "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழி மொபைல் போனுக்கு நன்கு பொருந்தும் இன்று மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் உலக மக்கள் தொகையை விட கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.  சிகரேட் அடிச்சா எப்படி புற்று நோய் வருமோ அதுபோல் மொபைல் போன்  பேசினாலும், கேட்டாலும் புற்றுநோய் வரும் என்று சொல்கிறார்கள். இது வெளிபடுத்தும் கதிர்வீச்சு  முலம் புற்றுநோய் செல் வளரும் என்று கூறுகிறார்கள். இவை அதிர்ச்சி அடையகூடியதுதான். கொஞ்சம் அதிகமாகவே யோசிக்கவும் வேண்டியதுதான்.





ஆய்வின் முடிவுகள்: 
 
Food and Drug Administration மற்றும் CTIA - The Wireless Association போன்ற அமைப்புகள் "புற்று நோய் உருவாவதற்கு மொபைல் போனில் போதுமான கதிர்வீச்சு  இல்லை" என்கிறது. ஆனால் Environmental Working Group(EWG) மற்றும் World Health Organization(WHO) போன்றவைகள் "பத்து ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போன் பயன்படுத்தினால் மூளை மற்றும் எச்சில் சுரபிகளில் புற்றுநோய் கட்டிகள் வரும் வாய்ப்பு அதிகமா இருக்கும் என்றும் நாம் அன்றாட நடவடிக்கையிலும் பாதிப்பு இருக்கும் மற்றும் இவை பத்து வயதுக்குள் உள்ள சிறுவர்களிடம் அதிக பாதிப்பை உண்டாகும் என்றும் கூறுகின்றார்கள். மொபைல் போனில் (SAR - Sepecific Absorption Rate) எண் அளவு ரேடியோ அலைவரிசையை பெறுகின்றது இதை நம் தலை  உருஞ்சுகிறது. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சுகிறதோ அதை SAR ரேட் என கூறலாம். ஒவ்வொரு போனுக்கும் ஒரு SAR ரேட் உண்டு. இவை அதிகமா இருந்தால் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கும் SAR ரேட் அறிய பேட்டரிக்கு கீழ் FCC (Federal Communication Commission)எண் இருக்கும். FCC website சென்று அதன் எண்ணை கொடுத்தால் கதிர்வீச்சின் அளவை அறியலாம். EWG.org website-இலும் சென்றும் பார்க்கலாம். 


அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (E.W.G) சமீபத்தில் ஒரு தீங்கு விளைவிக்கும் செல்போன் பட்டியலை வெளியிட்டது. இதில் அப்பிள், எல்.ஜி, சாம்சங், எச்.டி.சி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன வகை செல்போன்கள் அதிகமாக கதிர்வீச்சு  உள்ளது என்று அறிவித்துள்ளது.


அந்த லிஸ்ட்:


மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg


ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3GS)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg
எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg


பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg


சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg


மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg


மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)


அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg


பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg


எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)


அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg


சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)


அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg
ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.


மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


கதிர்வீச்சு தலைக்கு செல்லாமல் இருக்க ஹெட்செட்  அல்லது ஸ்பீக்கர் பயன்படுத்துவது நல்லது. நாம் பேசும்போதும் text அனும்பும்போதும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். callமற்றும் sms வரும்போதும் கதிர்வீச்சு குறைவாக இருக்கும். எப்படி இருந்தாலும் குறைவாக பேசுவது  நலம். "மற்றவை நேரில் பேசலாம்"  என்று இனிமையாக சொல்லலாம்.  இதனை மற்றவரிடமும் கூறுங்கள்.


................சமுக நலன் காப்போம்..............
                                                         நன்றி-rkguru.blogspot.com

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆயங்குடி புதுத்தெரு ஆயிஷா பீவி அவர்கள் மறைவு



ஆயங்குடி புதுத்தெரு அப்துல் கபூர் அவர்களின் தாயார் ஆயிஷா பீவி 27.08.2010 அன்று தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக....

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


யாருக்குச் சொந்தம் ரோஜாக்களின் தேசம்? - காஷ்மீர் பற்றிய ஒரு பறவைப்பார்வை



என்னை என் மண்ணில்

புதைத்தாய் பகைவனே!

என் மண்ணை

எங்கே புதைப்பாய்? - காசி ஆனந்தன்



மீண்டும் பற்றியெரிகிறது காஷ்மீர். இம்முறை தெருக்களில் இறங்கிப் போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்லர். காஷ்மீர மக்கள். சிறார்களும் இளைஞர்களும் யுவதிகளும் முதியோரும் என பால்வேறுபாடின்றி, வயது வேறுபாடின்றி எல்லோரும் வீதிகளில்.... கொப்பளிக்கும் கோபமும், குருதியும் ஒன்றாய்க் கலந்து காஷ்மீரத்தெருக்களில் ஓடுகிறது.

அவர்களின் கோரிக்கை என்ன? அதன் நியாயம் என்ன? 

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


செல்பேசியிலிருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு





கேமரா வசதியுடைய செல்பேசியிலிருந்து உங்கள் நிகழ்ச்சிகளை நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை bambuser.com என்ற இணையதளம் வழங்குகிறது.இத்தளத்திற்கு சென்று கணக்கை தொடங்கவும். பேஸ்புக் கணக்கின் மூலமாகவும் உள்ளே நுழையலாம். செல்பேசிக்குறிய மென்பொருளை உங்கள் செல்பெசியில் இன்ஸ்டால் செய்யவும்.பிறகு நிறுவப்பட்ட மென்பொருளை திறந்து ஒளிபரப்பை ஆரம்பிக்கலாம்.  இதன் மூலம் நம் வீடு மற்றும் பொது நிகழ்ச்சிகளை நம் செல்பேசியிலிருந்தே உலகம் முழுவதும் நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். தேவை உங்கள் செல்பேசியில் அதிவேக இணைய இணைப்பு.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


நம் வீட்டு திருமண நிகழ்ச்சியை பேஸ்புக்-ல் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்



நம் வீட்டு திருமண நிகழ்ச்சியை உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களும் பார்க்கும் வண்ணம் பேஸ்புக்-ல் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.பிரம்மாண்ட படங்களின் பாடல் வெளியீட்டுவிழா நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்த காலம் எல்லாம் மாறி இப்போது நம் வீட்டு திருமண நிகழ்ச்சியைக் கூட உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் நேரடியாக இணையம் மூலம் காட்டலாம். பேஸ்புக் தன் பயனாளர்களுக்காக அவர்களது முக்கியமான எல்லா நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பேஸ்புக் லைவ் வீடியோ-வை அறிமுகப்படுத்தியுள்ளது. லைவ் ஸ்டிரிம் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த நேரடி

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் படுகொலைக்கு மன்னிப்புக் கோரியது தமிழ் கூட்டமைப்பு!




மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் சுமார் 300 இற்கும் அதிகமானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் 1990 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இருபது வருடங்களுக்குப் பின் மன்னிப்புக் கோரி உள்ளது.


கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரி உள்ளார்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


அதிக நேரம் கணினி முன் அமர்ந்திருப்பவர்கள் கவனத்திற்கு...



தொடர்ச்சியாக 23 மணிநேரம் இன்டர் நெட்டில் வெப்சைட் பார்ப்பவரா .. எங்களுக்கு எல்லாம் வெற வேலையே இல்லையா? என்று கோபப்படக்கூடாது.அப்படி பார்த்துக்கிட்டு, படிச்சிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு தான் கீழே உள்ள மேட்டர்...அப்படி மொய்பவர்களுக்கு இருதயம் சம்மந்தமான நோய் வரும் என அமெரிக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என நாளிதழ் ஓன்றில் செய்தி வந்துள்ளது.

அமெரிக்காவின் டெய்லி மெயில் எனும் மருத்து இதழின் ஆசிரியர் டேவிட் டஸ்டன் கூறுகையில்... நாம்

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


இஸ்ரேல் ஈரானைத் தாக்கும் அபாயம்..!




ஜெருசலேம்: ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளை அமெரிக்கா உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால் இஸ்ரேல் நேரடியாக களமிறங்கி ஈரானின் அணு உலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக் கூறப்படுகிறது.ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை அடுத்த சில மாதங்களுக்குள் அமெரிக்கா எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் ஓராண்டுக்குள் இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


பிடிஎப்-ஐ ஆன்லைன் மூலம் எடிட் செய்யலாம்



பிடிஎப் (PDF) கோப்பில் முக்கியமானவற்றை நாம் தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலம் எந்த பிடிஎப் மென்பொருளும் இல்லாமல் குறித்தும் சேமித்தும் வைத்துக்கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பிடிஎப் கோப்புகளில் பலவற்றை நாம் நம் கணினியில் சேமித்து வைத்திருப்போம் ஆனால் அந்த கோப்பில் சில முக்கியமான வரிகளை குறித்து (மார்க்) வைத்தால் அடுத்த முறை நாம் பார்க்கும் போது எளிதாகவும் உடனடியாகவும் பார்க்கலாம். சில நேரங்களில் பிடிஎப் கோப்பில் முக்கியமான படங்களுக்கு விளக்கம் கூட அருகில் எழுதி வைத்துக்கொள்ளலாம் இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்றால் இதெல்லாம் எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் ஆன்லைன் மூலம் நாம் பிடிஎப் கோப்புகளை மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.இணையதள முகவரி : https://www.pdfescape.com

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 3 comments


கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்



கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்

நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.

கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட்

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


நோன்பு சட்டங்கள்



பிறை பார்த்து நோன்பு...
நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.

தகவலறிந்து நோன்பு...

மக்கள் எல்லாம் பிறை பார்க்க முயன்றார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம் 'நான் பிறையைப் பார்த்தேன்' என்று கூறினேன், நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்றுதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- அபூதாவூத், தாரமி, இப்னுஹிப்பான், ஹாகீம், பைஹகீ, தாரகுத்னீ.ரமளானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்கக் குழம்பினார்கள், (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராம வாசிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறைப் பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள், உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


நோன்பு சம்மந்தப்பட்ட சில சட்டங்கள் . குரான் ஹதீஸ் ஒளியில்



சுருக்கமாக சில நோன்பு சட்டங்கள் :
- நோன்பு நோற்றவர் பேஸ்ட் போட்டு பல் துளககலாம் . நபி (ஸல்) அவர்கள் காரமும் துவர்ப்பும் கொண்ட மிஸ்வாக் குச்சியை கொண்டு பல் துளக்கியுள்ளார்கள் .
- காத்து , மூக்கில் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம்
- மக்ரிப் தொழுகைக்காக பங்கு கூறப்பட்டதும் அந்த வினாடியே நோன்பு திறப்பது மிகச்சிறந்த நபி வழியாகும் . தாமதம் செய்வது நபி வழியை புறக்கணிப்பதாகும்.
- நோன்பு நோற்றவர் . அல்லா நம்மை கவனிக்கிறான் . நம்முடைய இந்த அமலை ஏற்றுக்கொள்வான் . நம்முடைய பாவங்களை மன்னித்துவிடுவான் . நமக்கு சுவர்க்கத்தை கொடுப்பன் . நமக்கு அருள் புரிவான் போன்ற நல்ல என்னத்தில் இருக்கவேண்டும் .
பிறை பார்த்து நோன்பு...
நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும்

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ரமளான் முபாரக்



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!

அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!
ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!
இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!
ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!
உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!
ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!
எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!
ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!
ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!
ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!
ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்...
நம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி -அரசு வழங்கும் தொகை எவ்வளவு




தொழில் படிப்பு, மற்றும் மருத்துவ படிப்பிற்க்கு குடும்பத்தில் முதல் பட்டதாரிகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழக அரசு ஆணை வெளியிட்டது, முழு செலவையும் அரசு ஏற்பதாக சொன்னாலும் , படிக்க செலவாகும் அனைத்து தொகையையும் அரசு கொடுப்பதில்லை, எந்த படிப்பிற்க்கு எவ்வளவு தொகை அரசு அளிக்கும் என்பதை பாருங்கள்
2/07/10 அன்று அரசு வெளியிட்ட அரசானை

எனவே மாணவர்களே! பெற்றோர்களே! முழு செலவையும் அரசு அளிக்கும் என எண்ண வேண்டாம்.
பொறியியலை பொருத்தவரை அண்ணா பல்கலைகழகங்களில் ஒரு செமெஸ்ட்டருக்கு ( 6 மாதம்) கல்வி கட்டணமாக (தோரயாமாக ) ரூ.10,000 வாங்குகின்றனர். (கல்லூரிக்கும் கல்லூரி சிறிய வேறுபாடு உண்டு).
கவுன்சிலிங் மூலமாக இடம் கிடத்த மாணவர்களுக்கு தனியார் பொறியியல்

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments


காவல் துறையின் நிரூபண-சான்றிதழ் இல்லாமலேயே ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது



காவல் துறையின் நிரூபண சான்றிதழ் இல்லா மலேயே ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு 8 மாதம் செல்லத்தக்க பாஸ் போர்ட்டை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள் ளது. அதன்படி 15 நாளில் முதல் பாஸ்போர்ட் சென் னையில் கடந்த திங்கட் கிழமை வழங்கப்பட்டது. 

வழக்கமாக பாஸ் போர்ட் வாங்க ஒருவர் விண்ணப்பம் செய்தால் அவரை பற்றி காவல் துறையினர் விசாரித்து ஒரு நிரூபண சான்றிதழ் வழங்க வேண்டும் அதன் அடிப் படையிலேயே பாஸ் போர்ட் வழங்கும் அலுவ லகம் சம்பந்தப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட்டை வழங்கும். இந்த முறையில் கால தாமதம் ஏற்படுகிறது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆயங்குடி காயிதேமில்லத் நகர் ஆயிஷா பீவி அவர்கள் மறைவு




ஆயங்குடி காயிதேமில்லத் நகர் சேர்ந்த சையது அவர்களின் தாயார் ஆயிஷா பீவி அவர்கள் 07.08.2010 அன்று தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


முஸ்லிம் மாணவர்கள் வங்கிக் கணக்குதொடங்க மறுக்கக் கூடாது



குறைந்தபட்சத் தொகை இருப்பில் இல்லாமல் முஸ்லிம் மாணவர்கள் வங்கி கணக்கை தொடங்க மறுக்கக் கூடாது என நாடாளுமன்றத்தில் எம். அப்துர்ரஹ்மான் கோரிக்கை வைத்தார். 




நாடாளுமன்ற மக்கள வையில் 377-வது விதியின் கீழ் அவசர மற்றும் அவ சிய பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் மீது வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசியபோது குறிப்பிட்ட தாவது-

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


300 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் ஆற்காட்டில் மீட்பு





வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை தமுமுக 01.08,2010 அன்று அதிரடியாக மீட்டது. அன்று மாலை அஸர் தொழுகையில் இருந்து தொடர்ச்சியாக தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. 

20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளியை சுற்றி குடியிருப்புகளும், பள்ளிகூடம் போன்றவற்றை ஜமாத்தார்களின் உதவியுடன் அமைப்பதற்கான முயற்சிகளை தமுமுக தற்போது எடுத்து வருகின்றது. 

தமுமுகவினரின் பள்ளிவாசல் மீட்புபணிகள் தமிழகம் முழுக்க செயல்படும் ஜமா அத்துக்களால் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


இந்தியாவில் முதல் முஸ்லிம் தலைமை தேர்தல் ஆணையர்!



இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஷஹாபுத்தீன் யாகூப் குரைஷி குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் முதல் முதலாக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் ஒருவர் தலைமை தேர்தல் ஆணையர் ஆகியுள்ளார்.

63 வயதான இவர் டெல்லியைச் சேர்ந்தவர். 1947 ஜூலை 11ஆம் தேதி பிறந்த இவர் 1971 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேறினார்.

வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற குரைஷி பாரசீகம், அரபி, ஜெர்மன் மொழிகளில் சிறந்த புலமை மிகுந்தவர்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


பரங்கிப்பேட்டையில் ததஜ மர்கஜ் திறப்பு




கடந்த 30.07.2010 வெள்ளிக்கிழமை அன்று பரங்கிப்பேட்டையில் TNTJ மர்கஜ் திறக்கப்பட்டது. இதில் ததஜ மேலான்மைக்குழு உறுப்பினர் பி.ஜெய்னுலாபிதீன் கலந்துகொண்டு ஜும்ஆ சிறப்புரையாற்றினார்.மஸ்ஜிதுகள் நிறுவப்படுவதன் நோக்கம் மற்றும் அங்கு ஆற்றவேண்டிய சமுதாயப்பணிகள் போன்றவற்றைப் பற்றி உரையாற்றினார்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


அஇஅதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்துப்பு



அஇஅதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களை சந்திக்க வருமாறு அஇஅதிமுகவின் தலைமை நிலையம் சார்பில் முன்னாள் அமைச்சர் கே. செங்கோட்டையன் தமுமுகவின் தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து கடந்த ஜுலை 30 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அஇஅதிமுகவின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பது என்று தீர்மாணிக்கப்பட்டது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


காஷ்மீர்-டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்





PDF
2009 அக்டோபர் மாதம் ராபர்ட் பிராட் ராக் என்ற பிரிட்டன் அறி-ஞர் இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதி இரண்டிலும் சேர்த்து ஒரு கருத்துக்கணிப்பினை நடத்தினார். 37 பக்கங்களைக் கொண்ட அந்த கருத்துக் கணிப்பில் பாகிஸ்தானில் உள்ள காஷ்மீர் மக்களில் 44 சதவீதம் பேர் காஷ்மீர் தனிநாடாக வேண்டும் என விரும்புகிறார்களாம். இந்தியாவில் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த 43 சதவீதம் பேர் தனி காஷ்மீரக் கொள்கைக்கு பச்சைக் கொடி காட்டுபவர்கள் என அந்த கருத்துக் கணிப்பு குறிப்பிடுகிறது.

1948-49 ஆம் ஆண்டுகளில் காஷ்மீர் மக்களின் மனப்பான்மை இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைவது என்ற குறிக் கோள்களுடன் இருந்ததாகவும் ஆனால் தற்போது 75 சதவீதத்திலிருந்து 95 சதவீத மக்கள் ‘ஆஜாதி’ சுதந்திர இறுதித்தீர்வு எனக் கருதுவதாக சர்வே கூறுகிறது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ரமலானை வரவேற்போம்




மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்..... 'இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்து காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும'. (அல்குர்ஆன் 2:185)

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


உனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி




பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப்படுகின்றது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


புனிதமிகு ரமளான்




இந்தப் பரந்த பூமியைப் படைத்து, அதில் மிகச் சிறந்த படைப்பினமாக உருவாக்கப்பட்டுள்ள மனிதனுக்கு இறைவன் ஏராளமான அருள்களைப் புரிந்துள்ளான். அவனது மாபெரும் அருளுக்கு எடுத்துக்காட்டாக இந்த ரமளான் மாதமும் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடந்து, அவன்

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info