தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு கருணாநிதியை சந்தித்தார் பி,ஜே



முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உள்பட நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.
l
பின்னர் வெளியில் வந்த ஜெய்னுலாபுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வி, வேலைவாய்ப்பில் அடித்தட்டு முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் தனி இடஒதுக்கீடு தேவை என்ற அடிப்படையில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆட்சியில் பெற்றோம்.
m
இது போதுமானதாக இல்லை என்று கருதியதால் இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டை யார் அதிகரித்து தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறுகிறார்களோ அவர்களை ஆதரிப்பது என்ற நிலையில் இருந்தோம்.
m
அ.தி.மு.க. தலைமை எங்களை 5 முறை தொடர்பு கொண்டு இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவோம் என்றனர். எங்கள் அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
m
ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக அறிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கூறாமல் சென்றுவிட்டது. தேர்தல் அறிக்கையில் கூறாமல் பிரசாரங்களில் கூறுவதை நாங்கள் உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.
k
அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கை அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிப்பது என்று எங்கள் மாநில பொதுக்குழுவில் முடிவெடுத்திருந்தோம். அந்த முடிவினை முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து தெரிவித்தோம். பொதுக்குழுவில் எடுத்த முடிவுப்படி முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு தரவேண்டும் என்றும் நாங்கள் அவரிடம் கூறியிருக்கிறோம்.
இவ்வாறு ஜெய்னுலாபுதீன் கூறினார்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |




Share your views...

3 Respones to "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு கருணாநிதியை சந்தித்தார் பி,ஜே"

T.Safiullah.Ayangudi சொன்னது…

தெளிவான நிலைபாடு


27 மார்ச், 2011 அன்று 10:59 PM
Unknown சொன்னது…

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
T.Safiullah.Ayangudi சொன்னது…

ஓட்டு போடுவதற்காக அரசியல் வாதிகளிடமிருந்து பனம் வாங்கி சாப்பிடுவது ஹராமாகாதா? எதற்காக கொடுக்கப்பட்டது ? யார் கொடுத்தது? நம்முடைய முறையான உழைப்பால் வந்தத பனம் அல்ல அது . அதை பெற்றுக்கொள்வது முறையற்ற செயலாகும். வினியோகிப்பதும் பாவததில் பங்கேற்பதாகும். உன் பொருள் எங்கிருந்து எவ்வாறு வந்தது எவ்வாறு செலவு செய்தாய் என்று மறுமையில் கேட்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும் . மறந்துவிடவேண்டாம்.


16 ஏப்ரல், 2011 அன்று 7:27 PM
 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info