விரைவில் பில்கேட்ஸ் ஆக போகும் இரண்டு இந்திய நண்பர்கள் – அவர்கள் உருவாக்கிய BlixOS operating சிஸ்டம்



சுயெஸ் ஸ்ரிஜன் நொய்டா கேயைதான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இவர் தன்னுடைய நண்பன் சிதிஜ் குமார்ருடன் இணைந்து உருவாக்கியது இந்த BlixOS operating சிஸ்டம்.
இதன் முக்கிய அம்சம் இது 12 நொடிகளில் கணினியை boot



செய்யும். இது main memory யை குறைந்த அளவிற்கு உபயோகித்து கொள்ளும்( 100 -120 MB ).உங்கள் Hard drive வில் ( 600 – 640 MB ) அளவுமட்டுமே இடத்தை எடுத்துக்கொள்ளுமாம்.



கணினி உபயோகிப் பவர்களில் அனைவரும் விரும்புவது தங்கள் OS வேகமாக வேலை செய்ய வேண்டும் என்பதுதான். அந்த வகையில் BlixOS சின் வேலை செய்யும் வேகம் பிரமிக்கதக்கது. 1 GB அளவிற்கான கோப்புகளை ஒரு drive வில் இருந்து மற்றொரு drive விக்கு மாற்ற 40 வினாடிகள் மட்டும் எடுத்துகொள்ளுமாம்.
பலர் இன்னும் குறைந்த செயல்பாடுடைய pentium 4 ப்ரோசெச்செர் வகை கணினியை உபயோகித்து வருகிறார்கள். இதில் விண்டோஸ் XP , Vista

மற்றும் 7 Operating System தை இயக்குவது கடினம். ஆனால் BlixOS

நீங்கள் நினைத்து பார்க்கமுடியாத செயல்பாட்டை காட்டுமாம்.BlixOs மூன்று வெவ்வேறு வடிவில் உருவாக்க பட்டு உள்ளது. BlixOS Home ,BlixOS Professional மற்றும் BlixOS ultimate ஆகும். இதில் BlixOS Home ஒரு operating environment, இது OS இல்லை.




ஒரு பொருளை உருவாக்கினால் போதுமா அந்த பொருளை 
சரியான முறையில் வியாபாரம் செய்ய வேண்டும். 
அந்த வகையில் சுயெஸ் தன் நண்பனுடன் இணைந்து தங்களுடைய 
Blix Corporation நிறுவனத்தை உருவாக்கினார். வரும் செப்டம்பர் 30 
அதிகாரப்பூர்வமாக BlixOS Professional Beta வை வெளியிட உள்ளனர்.




இவர்கள் வெற்றிபெற வாழ்த்துகள்.
நன்றி : www.blixcorp.com, www.youtube.com

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


வேலைவாய்ப்பு பதிவுக்கான இணையதளம் தொடக்கம்






சென்னை, செப். 15: ஆன்லைனில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறையை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.

இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் தலைமை வகித்தார்.

ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். இதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. பதிவில் மாறுபாடு ஏதேனும் இருப்பின் அதனை உரிய சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பகத்தை நேரில் அணுகி சரிபார்த்துக் கொள்ளலாம்.

புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in

ஆன்லைனில் பதிவு செய்யும் முறை

1 ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?

இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.

2 கூடுதல் பதிவு செய்வது எப்படி ?

ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.

3 ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா?

ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

4 விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா? என்பதை எப்படி அறிவது?

தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும்(password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்

5 ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா?

ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்

6 ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை(priority certificate) பதிய இயலுமா?

முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார்?

இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.

8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை?

நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆயங்குடி கீழத்தெரு அப்துல் ஷுக்கூர் அவர்கள் மறைவு



ஆயங்குடி புதுத்தெரு சையது முஹம்மது ஹாபிஜ், சையது இப்ராஹிம் அவர்களின் சகோதரரும் கீழத்தெரு சபியுல்லா அவர்களின் தந்தையுமான அப்துல் ஷுக்கூர் அவர்கள் 11.09.2010 அன்று தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக....

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


2016- சட்டசபை தேர்தலில் தலித் - முஸ்லிம் கூட்டணி உருவாகும் - திருமா



விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூரில், இப்பீரியல் விடுதியில் நேற்று(05-09-2010)மாலை 6 மணியளவில் நடபெற்றது. 

3 நாட்கள் நோன்பு இருந்து எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர்,  ’’விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 ஆண்டுகளாக இப்தார் விருந்தை கொடுத்து வருகிறது. 

தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு நிரந்தர, நிலையான கூட்டணி எல்லா நிலையிலும் சமூக நிலையை உருவாக்குகின்ற வகையில் ஏற்பட வேண்டும். 

அந்த முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இஸ்லாமியர்களும், தலித்துக்களும் இணைந்து சமூக கூட்டணி உருவாக்க வேண்டும். அது ஒரு அரசியலில் மாற்றத்தை ஒரு கூட்டணியை உருவாக்குகின்ற எண்ணத்தில் திட்டமிட்டு செயல்படத் தொடங்கி இருக்கிறது. 

திருமாவளவன் வாழ்விலும், தாழ்விலும் உங்களோடு இருப்பான் அரசியல் ஆதாயத்திற்காக இங்கு பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம்.  நான்  அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பேசுகிறேன். 

எனக்காக மட்டுமல்ல உங்களுக்காக..., நமக்காக.. எல்லோரையும் எவ்வளவு காலம் தோளில் சுமக்கிறோம் இவ்வளவு காலம் உழைத்தது போது இனி நமக்கு அதிகாரம் வேண்டும். 

2016- சட்டசபை தேர்தலில் தலித் - முஸ்லிம் கூட்டணி உருவாகும். முஸ்லிம்கள் பல குழுக்களாக இருந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும் இஸ்லாமிய மதம் கட்டுப்பாடுள்ள மதம். இதை வேறு எந்த மதத்திலும் பார்க்க முடியாது. நபிகள் நாயகம் போல் பல தலைவர்கள் தேவை. தலைமை பண்பு கொண்டவர்கள் தேவை’’ என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில்இஸ்லாமிய சமூகப் பெரியவர்கள், வக்பு வாரிய தலைவர் கவிஞர் அப்துல் ரகுமான், தாவூத் மியான்கான் மற்றும் கட்சியின் முன்னனி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கட்சியின் பொருளாளர் முகமது யூசப் ஏற்பாடு செய்திருந்தார்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


விஷம் கக்கும் வெப்சைட்டுகள்!



இஸ்லாத்திற்கெதிரான யூதர்களும் கிறித்தவர்களும் முஸ்லிம்களை திசைதிருப்பி அவர்களின் கொள்கைகளை உடைத்தெறிய பல உபாயங்களையும், யுக்திகளையும், தந்திரங்களையும் கையாண்டு வருகின்றனர்.
1. அவற்றில் ஒன்று குர்ஆனை தங்களுக்கேற்றாற் போல் மொழியாக்கம் செய்து வினியோகிப்பது.
2. இரண்டாவது இஸ்லாத்திற்கெதிரான துண்டு பிரசுரங்களை வெளியிட்டு முஸ்லிம்களை அவர்கள் பால் ஈர்ப்பது.
3. மூன்றாவதாக புதிய புதிய இணைய தளங்களை இஸ்லாத்தின்
பெயராலேயே திறந்து, மக்களை திசைதிருப்புவது.
உதாரணத்திற்கு சில:- விஷம் கக்கும் வெப்சைட்டுகள்:-
1.     http:// dialspace.com
2.     http:// dial pipex.com
10. http://www.thspirit to islam.com
( ref : radiance weekly 25-31 Aug 2002,Unarvu Sep 6-12-2002)
முஸ்லிம்களே! இஸ்லாத்திற்கெதிராக இது போன்ற பல இணைய தளங்களை நமது எதிரிகள் உலாவ விட்டிருக்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. நமது நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் தகர்க்கக் கூடியவை.
இந்தத் தலைப்புகளைப் பார்க்கும்போது இஸ்லாமிய இணைய தளங்கள் போன்று தோன்றலாம். படிப்பதற்கு ஆவலும் ஏற்படலாம். தெரியாது உள்ளே சென்றால் தான் அவை எவ்வளவு ஆபத்தானவை என்பது தெரிய வரும்.
நச்சுக்கருத்துக்களை பாய்ச்சும் இந்த இணைய தளங்களை இனம் கண்டு இஸ்லாத்தை அதிகம் தெரிந்து கொள்ளாத நமது முஸ்லிம் சகோதரர்க ளும், குறிப்பாக புதிதாக இஸ்லாத்தில் இணைந்த நமது சகோதரர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். இதைப் போன்று இஸ்லாத்தின் கொள்கைகளைத் தகர்க்கும் பல இணைய தளங்களை ஷீஆக்களும் நடத்துகின்றனர்.
குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான எந்தக் கருத்துக்களாயினும் அதைப் படிப்பதில் நீங்களும் எச்சரிக்கையாக இருந்து, உங்கள் சகோதர முஸ்லிம்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் நமது ஈமானைக் காத்தருள் புரிவானாக.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info