ஆயங்குடியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம்
கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் 17ஆம் தேதியன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பொதுக் கூட்டம் நகர தலைவர் ஏ.ஹச் .முஹமத் ஹனிப் தலைமையில் நடைப்பெற்றது நகர ஜமாதுல் உலமா சபை தலைவர் மௌலானா முஹமத் மன்சூர் கிராஅத் ஓதினார், ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி ஏ.எம்.இத்ரிஸ்.மற்றும் அனைத்து மஸ்ஜிதுகளின் முத்தவல்லிகள் முன்னிலை வகித்தனர் நகர முஸ்லிம் லீக் பொருளாளர் ஹெச்.முஹமத் இக்பால் வரவேற்றுப்பேசினார் இக்கூட்டதில் காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.சிறப்புரையாற்றினர் மௌலானா பி.ஏ.ஜபார் அலி.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் ,முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் இஸ்மாயில் ,பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷித் ஜான் ஆயங்குடி ஊராட்சி தலைவர் நாகராஜன் மாவட்ட தலைவர் தலைவர் கே.ஏ.அமனுல்லா , துணைத்தலைவர் எம்.ஐ.அப்துல் வதுத், செயலாளர் ஏ.சுக்கூர் தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: ஆயங்குடி பக்கம், சமுதாய செய்திகள், முஸ்லிம் லீக்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

Previous Article



Share your views...
0 Respones to "ஆயங்குடியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம்"
கருத்துரையிடுக