கணினியை விரைவுபடுத்த - SpeedUpMyPC 2011
கணினியில் தினமும் பல்வேறு மென்பொருள்களை
நிறுவி பயன்படுத்தி வருகிறோம். உதாரணமாக இணையத்தில் கிடைக்கும் இலவச
மென்பொருள்களை பதிவிறக்கம் செய்வோம் பிடித்தால் பயன்படுத்துவோம்
இல்லையெனில் கணினியிலிருந்து நீக்கி விடுவோம் இவ்வாறு கணினியில் இருந்து
நீக்கம் செய்யும் போது மென்பொருள் முழுமையாக கணினியை விட்டு நீங்காது ஒரு
சில பைல்கள் கணினியிலேயே தங்கிவிடும், மேலும் கணினியை பயன்படுத்தும் போது
நாம் பயன்படுத்தும் மென்பொருள்கள் கணினியில் தேவையற்ற குப்பைகளை
சேமிக்கும், அதுவும் கணினியிலேயே தங்கிவிடும். கணினியானது அடிக்கடி கிராஷ்
ஆகினால் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் பைல்கள் சேதமாகும், இதுபோன்ற
காரணங்களால் கணினியினுடைய செயல்பாட்டில் வேகம் குறையும். இதுபோன்ற
நிலையில் கணினியில் உள்ள தேவையற்ற குப்பைகளை நீக்கினால் மட்டுமே
கணினியானது மிக விரைவாக செயல்படும். இதுபோன்ற பைல்களை நீக்கி கணினியை
சுத்தம் செய்ய வேண்டுமெனில் நாம் ஒரு மென்பொருளின் உதவியை கண்டிப்பாக
நாடிச்செல்ல வேண்டும். இதற்கு மென்பொருள் உதவி செய்கிறது. அதுவும் தற்போது
அந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.
மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய சுட்டி
மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய சுட்டி
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments